RAAYAN TAMIL CINEMA REVIEW

 


 

நண்பர்களுக்கு வணக்கம்.
'ராயன்' படத்தின் விமர்சனம்

தனுஷ் என்ற ஆகப் பெரும் நடிகனின் இயக்கத்தில் உருவான படம்.
தன் நடிப்பில் வெளியான சமீபத்துப் படங்கள் சரியாகப் போகாத காரணத்தால், தானே தன்னை நிலை நிறுத்த  இந்த முடிவு.
புதிய கதை ஒன்றும் இல்லை.
கதாபாத்திரங்கள் தேர்வு நன்று. அதே சமயம் வீணடிக்கப்பட்டுள்ளது.

கண்டிப்பாக இது ஸ்கிரிப்ட்டாகப் படிப்பதற்கு செமையாக இருந்திருக்கும்.
அதற்காகவே நடிகர்கள் எல்லோரும் சம்மதித்திருப்பர்.
ஆனால் திரையில் இது வெற்றி பெறாது என்று புரியாத அளவிற்கு முதிர்ச்சி இல்லாமல் உள்ளனர்.

சில காட்சிகள் நன்றாக, அதுவும் தனுஷ் டைரக்ஷனா என்று வியக்கும் அளவிற்கு உள்ளது.
உதாரணமாக தனுஷ் அறிமுகம், தங்கை துஷாரா விஜயன் அறிமுகம் ஆகட்டும், சில இடங்களில் வசனங்கள் ஆகட்டும்... க்ளிஷே இல்லாமல் உள்ளது.
ஆனால் இது மட்டும் போறாதே.

ஆரம்பத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சியில், சிறுவன் தனுஷ் பூசாரியை கொலை செய்தபிறகு அவன் பார்வையும் பாடி லாங்குவேஜூம் மாறுவதாக காட்சிப்படுத்தியுள்ளனர்...
நடிப்பும் காட்சியும் அமெச்சூரிஸாக உள்ளது.
சென்னை வந்தபின், கண் முழித்தவுடன் கத்தி எடுத்து குத்த வருவதெல்லாம் மோசமாக உள்ளது..

பல இடங்களில் ரஹ்மான் பின்னணி இசை அருமை.
எஸ் ஜே சூரியா டம்மியாக்கப்பட்டுள்ளார்... அவர் கோபப்படும்போதெல்லாம் சிரிப்புதான் வருகிறது..
அவர் சண்டை போடுவதெல்லாம் ஒட்டவே இல்லை. அவருக்கும் அது தெரியவில்லை.

ஆஸ்பத்திரி காட்சியெல்லாம் வெறும் பில்ட்டப்பாகவே உள்ளது.
3000ரூபாய் பாஸ்ட்புட் கடைக்கு இந்த ஸீன் அவசியமா?

செல்வராகவன் படங்களை இயக்குவதோடு நின்றுவிட்டால் மரியாதை காப்பாற்றப்படும்.
அவர் நடித்த அத்தனைப் படங்களிலும் ஒரே மாதிரி பாடிலேங்குவேஜ்..  
அவரை யாரோ நன்றாக  உசுப்பி விட்டுள்ளனர்.. இது அவருக்கு தேவையில்லாத வேலை.

படத்தில் அதீத வன்முறைக்கு காட்சிகள். கதை பெரிதாக இல்லாத காரணத்தினால், வன்முறையை புகுத்தி இடத்தை ரொப்பி உள்ளனர்.

தனுஷ் தன்னை இன்னொரு கமல்ஹாசனாக நினைத்துக் கொண்டுள்ளார்.
அவரின் அனுபவம், திறமை வேறு, இவர் வேறு.
நடிப்போடு நிறுத்திக் கொள்வது நலம். அதை சிறப்பாகவே செய்கிறார்.

இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்று கூறுவது மற்றும் ஒரு அரசியல்..
பார்வையாளர்கள் இன்னும் அவ்வளவு தரம் தாளவில்லை...

நன்றி
மகேஷ்
30.08.24

Comments

Popular posts from this blog

Vaazhai Tamil Cinema review