Posts

Showing posts from August, 2024

RAAYAN TAMIL CINEMA REVIEW

Image
    நண்பர்களுக்கு வணக்கம். 'ராயன்' படத்தின் விமர்சனம் தனுஷ் என்ற ஆகப் பெரும் நடிகனின் இயக்கத்தில் உருவான படம். தன் நடிப்பில் வெளியான சமீபத்துப் படங்கள் சரியாகப் போகாத காரணத்தால், தானே தன்னை நிலை நிறுத்த  இந்த முடிவு. புதிய கதை ஒன்றும் இல்லை. கதாபாத்திரங்கள் தேர்வு நன்று. அதே சமயம் வீணடிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இது ஸ்கிரிப்ட்டாகப் படிப்பதற்கு செமையாக இருந்திருக்கும். அதற்காகவே நடிகர்கள் எல்லோரும் சம்மதித்திருப்பர். ஆனால் திரையில் இது வெற்றி பெறாது என்று புரியாத அளவிற்கு முதிர்ச்சி இல்லாமல் உள்ளனர். சில காட்சிகள் நன்றாக, அதுவும் தனுஷ் டைரக்ஷனா என்று வியக்கும் அளவிற்கு உள்ளது. உதாரணமாக தனுஷ் அறிமுகம், தங்கை துஷாரா விஜயன் அறிமுகம் ஆகட்டும், சில இடங்களில் வசனங்கள் ஆகட்டும்... க்ளிஷே இல்லாமல் உள்ளது. ஆனால் இது மட்டும் போறாதே. ஆரம்பத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சியில், சிறுவன் தனுஷ் பூசாரியை கொலை செய்தபிறகு அவன் பார்வையும் பாடி லாங்குவேஜூம் மாறுவதாக காட்சிப்படுத்தியுள்ளனர்... நடிப்பும் காட்சியும் அமெச்சூரிஸாக உள்ளது. சென்னை வந்தபின், கண் முழித்தவுடன் கத்தி எடுத்து குத்த வருவதெல...

Vaazhai Tamil Cinema review

Image
    நண்பர்களுக்கு வணக்கம். 'வாழை' படம் பார்த்தபின் என் பார்வை... உண்மைக் கதையை தழுவி எடுக்கப்பட்டதாக துவக்கத்திலேயே கூறப்படுகிறது. படம் ஆரம்பத்தில் படத்தின் ஹீரோவான சிவானந்தன் ம்ம்மா ம்ம்மா... என்று கத்திக் கொண்டு ஓடுகிறான். நாமும் முக்கியமான நிகழ்வாக இருக்கும் என்று பதற்றம் கொள்கிறோம்.. ஆனால் படத்தின் இடையில் அந்த காட்சி விரிகிற போது, ஒன்றுமே இல்லாத விஷயமாகத் தோன்றுகிறது. அதைப் போல படத்தின் இறுதியில், சிவானந்தன் உயிர் தப்பி விடுவதால், மற்ற மரணங்கள் நம்மை பெரிதாக பாதிக்கவில்லை. படத்தில் எல்லா கதாபாத்திரங்களின் நடிப்பும் வெகு யதார்த்தம். நம்மையும் அப்படியே அந்த சூழ்நிலைக்கு கூட்டிச் சென்று விடுகிறார் இயக்குனர். சில காட்சிகளைத் தவிர, பெரும்பான்மையாக கேமரா இருப்பதே புலப்படாமல் படம் பிடித்துள்ளனர். அருமையான வாழ்வியல், மிகவும் சோகத்தை பிழியாமல் எடுத்தது நன்று. பல காட்சிகள் யதார்த்தத்துக்கு வெகு அருகில் உள்ளது. இயக்குனரின் முத்திரைக் காட்சிகள் இந்தப் படத்திலும் உள்ளது. ரயில் பூச்சி, கோழி, ஓணான், மாடு, தெய்வசிலை  என்று... ஆனால் இது படத்திற்கு தொய்வயே ஏற்படுத்துகிறது.. வெகு ஜனத்...