Vaazhai Tamil Cinema review
நண்பர்களுக்கு வணக்கம்.
'வாழை' படம் பார்த்தபின் என் பார்வை...
உண்மைக் கதையை தழுவி எடுக்கப்பட்டதாக துவக்கத்திலேயே கூறப்படுகிறது.
படம் ஆரம்பத்தில் படத்தின் ஹீரோவான சிவானந்தன் ம்ம்மா ம்ம்மா... என்று கத்திக் கொண்டு ஓடுகிறான்.
நாமும் முக்கியமான நிகழ்வாக இருக்கும் என்று பதற்றம் கொள்கிறோம்..
ஆனால் படத்தின் இடையில் அந்த காட்சி விரிகிற போது, ஒன்றுமே இல்லாத விஷயமாகத் தோன்றுகிறது.
அதைப் போல படத்தின் இறுதியில், சிவானந்தன் உயிர் தப்பி விடுவதால், மற்ற மரணங்கள் நம்மை பெரிதாக பாதிக்கவில்லை.
படத்தில் எல்லா கதாபாத்திரங்களின் நடிப்பும் வெகு யதார்த்தம்.
நம்மையும் அப்படியே அந்த சூழ்நிலைக்கு கூட்டிச் சென்று விடுகிறார் இயக்குனர்.
சில காட்சிகளைத் தவிர, பெரும்பான்மையாக கேமரா இருப்பதே புலப்படாமல் படம் பிடித்துள்ளனர்.
அருமையான வாழ்வியல், மிகவும் சோகத்தை
பிழியாமல் எடுத்தது நன்று.
பல காட்சிகள் யதார்த்தத்துக்கு வெகு அருகில் உள்ளது.
இயக்குனரின் முத்திரைக் காட்சிகள் இந்தப் படத்திலும் உள்ளது.
ரயில் பூச்சி, கோழி, ஓணான், மாடு, தெய்வசிலை என்று...
ஆனால் இது படத்திற்கு தொய்வயே ஏற்படுத்துகிறது..
வெகு ஜனத்திற்கு இந்த காட்சிகள் எரிச்சல் மூட்டுகின்றன
இன்னொரு விஷயம், இது 90 களில் நடந்த கதை என்பதால், இவ்வளவு காலம் கழித்து இந்த கதை தேவை தானா என்று தோன்றுகிறது.
இப்பொழுதும் இவ்வளவு மோசமான ஜாதி விசயங்கள் உண்டா என்றால், பெரும் கேள்வி தான்.
வாழ்வியலை சொல்வதில் தவறில்லை, ஆனால் பாரதிராஜா காலத்து கதைகள் இப்பொழுது எடுபடுமா?
சில இயக்குனர்கள், இவரைப் போன்று 'தனக்கான முத்திரை' என்று படத்துக்கு தேவையில்லாத விஷயங்களை திணித்து, படத்தின் மையாக கருவை கெடுத்து விடுகிறார்கள்..
பாலா, மிஸ்கின், பா இரஞ்சித் போன்ற பலரின் படங்கள் தோற்பதற்கு இது ஒரு முக்கிய காரணம்.
ஓவர்டோஸ் என்றும் கூறலாம்.
மாரி செல்வராஜும் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. இல்லையென்றால் கஷ்டம் தான்.
நன்றி
மகேஷ்
30.08.24

Comments
Post a Comment